Home / BREAKING / ‘Amaya’ Tamil Movie Stills

‘Amaya’ Tamil Movie Stills

Amaya is a tamil romantic drama film written and directed by Nikhil V.Kamal. The film stars  Suja Suriya Nila (Miss Madras 2016) in her feature film debut as the the title character, Master Mahindran playing a very pivotal role  in the film . Produced by peruvakkaran films , it features  soundtrack and score composed by by Gautam S , lyrics by the director himself Nikhil V Kamal cinematography  by Hari harish  and Shinto p George and editing by Rajesh hariharan.
The film is about a pregnant lady who is in search of her lover who happens to betray her .The film starts with Amaya recalling her love and life within her tribe.
It’s an very interesting and exciting plot of searching her lover in a completely new place and language unknown to her. Amaya is going to be a visual delight with beauty shots depicting beautiful landscapes and tribe culture.
பெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’..!
 
மிஸ் மெட்ராஸ்-2௦16 கதாநாயகியாக அறிமுகமாகும் ‘அமையா’..!
பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’.. நிகில் வி.கமல் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் சுஜா சூர்யநிலா என்பவர் டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.. இவர் 2௦16ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் மகேந்திரன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.
இந்தப்படத்திற்கு S.கௌதம் இசையமைக்க, பாடல்களை இயக்குனர் நிகில்  வி.கமலே எழுதியுள்ளார். ஹரிஹரீஷ் மற்றும் ஷின்டோ P.ஜார்ஜ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் ஹரிஹரன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
முகவரி, பெயர்  என எந்த விவரமும் தெரியாமல் தனது காதலனை தேடும் ஒரு கர்ப்பிணி பெண்ணின் கதை தான் இந்தப்படத்தின் மையக்கரு.  அமையா  தனது காதல் மற்றும் தனது பழங்குடியின வாழ்க்கையை நினைத்து பார்க்கும் விதமாக படம் துவங்குகிறது.
“தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத இடம் மற்றும் புரியாத பாஷை புழங்கும் இடத்தில் தனது காதலனை ஒரு கர்ப்பிணிப்பெண் தேடுவது என்பது மிகவும் சுவாரஸ்யமான அதேசமயம் வித்தியாசமான களமாக இருக்கும். அழகான லொக்கேஷன்களும் பழங்குடியினரின் கலாச்சராம் எல்லாமுமாக சேர்ந்து இந்த ‘அமையா ’ மிகப்பெரிய விஷுவல் விருந்தாகவும் இருக்கும்” என்கிறார் இயக்குனர் நிகில் வி.கமல்.

Check Also

“ஸ்வாமி சங்கரதாஸ் அணி “

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதில் ஸ்வாமி சங்கரதாஸ் அணியின் சார்பில் பாக்யராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *