Home / BREAKING / Avalukkenna azhagiya mugam Review

Avalukkenna azhagiya mugam Review

 

காதலில் தோற்ற மூன்று பேர் சேர்ந்து உண்மையான காதலை தேடி கண்டுபிடித்து அவர்களை சேர்த்துவைக்க துடிப்பதே ”அவளுக்கென்ன அழகிய முகம்”  திரைப்படம்

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் கேசவன். காதலில் எதிர்பார்க்காத ஒரு சில திருப்பங்களில் இயக்குநர் வைத்திருக்கும் காட்சிகளில் சிரிப்பை அடக்க முடியாமல் அரங்கம் அதிர்கிறது.

மூன்று நண்பர்களும் சேர்ந்து புதிய நண்பனின் காதலை சேர்த்து வைக்க அவன் காதலி இருக்கும் இடமான மதுரையை நோக்கி ஜீப்பில் செல்கின்றனர். அவர்களின் கூடவே பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் செல்கிறார். முதற்பாதியில் மூன்று நண்பர்களின் காதல் கதையை தனி தனியான பிளாஸ்பேக்கில் மூன்று பேருக்கும் தனி தனி டூயட் பாடல்களை கொடுத்து நகர்த்தி இருக்கிறார்,

நகைச்சுவை அதிகமாக இருப்பதால் படம் செல்வதே தெரியாமல் இடைவேளை வரை செல்கிறது. இடைவேளைக்கு பிறகு உண்மையான காதலர்களின் கதையை பிளாஸ்பேக்கில் சொல்கிறார். இவர்கள் இந்த காதலை எப்படி சேர்த்து வைத்தார்கள். காதலர்களை சேர்த்து வைக்க சென்ற நண்பர்களுக்கு என்ன ஆயிற்று என்பதை உங்கள் அருகில் உள்ள திரை அரங்கிற்க்கு சென்று பாருங்கள்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்தே எடுக்கப்பட்ட திரைப்படம். வைரமுத்துவின் பாடல் வரிகள் படத்திற்க்கு கூடுதல் சிறப்பு கதையின் போக்கிற்க்கு ஏற்றவாறு பாடல்களை அமைத்துள்ளார். யோகி பாபு வரும் ஒருசில நிமிடங்கள் தனக்கென இருக்கும் கவுண்டர் காமெடியை அள்ளி சிதறவிட்டு இருக்கிறார்.

பவர் ஸ்டாரின் காமடிகள் நன்றாகவே இருக்கிறது. படம் நகைச்சுவை கதை களத்தில் இருப்பதால் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இல்லை  அவர் அவர்கள் தங்களுக்கு கொடுக்க பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளனர்

மொத்தத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் உண்மையாகவே அழகிய முகமே

விமர்சனம் : அஸ்வின்

மதிப்பெண்: 45/100

 

Check Also

Vishalளுக்கு ஏன் இந்த காண்டு | Simbu Fans ஆவேசம்.!!! | RED CARD ISSUE | Simbu | Vishal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *